தலகொண்ட அம்மன் கோவில் திருவிழா
ADDED :4872 days ago
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பந்தாரஅள்ளி கரகப்பட்டி தலகொண்ட அம்மன் கோவில் திருவிழா நாளை (13ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி, நாளை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், மாலை வாண வேடிக்கை மற்றும் திருவீதி உலா நடக்கிறது. 14ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மதியம் எருது விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில், 12 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.