சொன்னால் சொன்னது தான்!
ADDED :1716 days ago
தன் முடிவிற்கு தானே நாள் குறித்துக்கொண்டு, ராமன் வைகுண்டம் சென்ற கதை தெரியுமா...
ராவணனால் மிகவும் சிரமப்படுகிறோம் என தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.
தேவர்களே! நான் பூமியில் பிறந்து பதினோராயிரம் ஆண்டுகள் வசிப்பேன். அந்த காலகட்டத்தில் ராவணனை அழித்து விடுவேன், கவலையை விடுங்கள், என்றார்.
சொன்னபடியே செய்து முடித்தார். அவர் வாழ்வின் கடைசி நாளும் வந்தது. அயோத்தி அரண்மனைக்கு வந்து ராமனைச் சந்தித்தான் எமன்.
ஐயனே! இன்றோடு தங்கள் ஆயுள் முடிகிறது, கிளம்பலாமா? என்றான். மறு பேச்சில்லாமல் சரியென்று கிளம்பி விட்டார் உத்தமபுருஷர்.ராமன் நினைத்திருந்தால், தன் ஆயுளை எவ்வளவு காலத்திற்கும் நீட்டியிருக்கலாம். ஆனால் அவர் சொன்னதை சொன்னபடி காப்பாற்றினார். ஒரு சத்தியம் சத்தியத்தை காப்பாற்றியதில் என்ன ஆச்சர்யம் வேண்டியிருக்கிறது!