உடனடி பலன் கிடைக்க...
ADDED :1725 days ago
மறைந்திருந்து வாலி மீது அம்பு எய்தார் ராமர். அம்பு பாய்ந்து கீழே விழுந்த வாலி, ராமரை கண்டதும் பிரம்மித்துப் போனான். சக்கரவர்த்தி திருமகனே! நீயா இப்படிச் செய்தது? உன்னிடமா இரக்கம் இல்லை? என் மேல் அப்படி என்ன குற்றம் கண்டாய்? சீதைக்கு துன்பம் செய்த காகாசுரனுக்கு கூட வாழ்வளித்தாய். ஆனால் ஒரு தவறும் செய்யாத எனக்கு மரணமளித்து விட்டாயே. புரிகிறது... தாய் போல இருந்த சீதையை நீ பிரிந்ததால் தான் உன்னிடம் ஈரம் இல்லாது போயிற்று போல... என்று முனகியபடியே உயிர் விட்டான்.
ராமனிடம் வைக்கும் எந்த கோரிக்கையானாலும் அது சீதையின் மூலமாவே நிறைவேற்றப்படும். எனவே கோரிக்கைகளை சீதையிடம் வைத்தால் ராமன் அருளால் உடனடியாக பலன் கிடைக்கும்.