சாய் தபோவனத்தில் சித்திரை மாத ஆரத்தி
ADDED :1894 days ago
நாமக்கல்: சித்திரை மாத இரண்டாவது வியாழனை முன்னிட்டு, நாமக்கல்-பரமத்தி சாலை தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், சுவாமி ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மதியான் ஆரத்தி என்னும் ஆரத்தி பாடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.