மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம்
ADDED :1722 days ago
தேவகோட்டை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா எட்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடத்தப்பட்டது. தினமும் சுவாமிகள் சிறப்பு வாகனங்களில் கோயிலுக்குள் உலா வந்தனர். 9ம் நாளான நேற்று மாலை தேரோட்டம் நாளை முன்னிட்டு கோயிலுக்குள் வெள்ளி ரதம் உட்பட பஞ்ச ரதங்களில் பஞ்ச மூர்த்திகள் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஜமீன்தார் சோமநாராயணன், டிரஸ்டிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.