திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :1723 days ago
திருத்தணி - முருகன் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு விழாவில், நேற்று முன்தினம், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 17ம் தேதி, சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.கொரோனா தொற்று காரணமாக, உற்சவர் முருகப்பெருமான் உட்புறப்பாடு தினசரி நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலை, மலைக்கோவில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகர், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது.இதில், பக்தர்கள் சமூக விலகலுடன் குறைந்த அளவில் பங்கேற்றனர். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.