உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பௌர்ணமி வழிபாடு: பக்தர்கள் ஏமாற்றம்

சித்ரா பௌர்ணமி வழிபாடு: பக்தர்கள் ஏமாற்றம்

பழநி: பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களில் கொரோனா தோற்று பரவலைத் தடுக்க அரசு வழிகாட்டு நெறி முறைப்படி நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மலைக்கோயில் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் முன்னறிவிப்பின்றி கோயில்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் நேற்று தீர்த்தக் காவடி எடுத்து வந்த பலர் திரும்பிச் சென்றனர். மேலும் பாத விநாயகர் கோவிலில் வணங்கி விட்டுச் சென்றனர். திருஆவினன்குடி கோயிலின் வெளிப்புறம் இன்றைய தரிசனம் செய்தனர். நேற்று சித்ரா பௌர்ணமி என்பதால் உள்மாவட்ட பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் என அதிக அளவில் வந்து ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !