பழநியில் சித்ரகுப்த பூஜை
ADDED :1735 days ago
பழநி: பழநியில் ஆண்டு தோறும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று சிந்திர குப்தன் பூஜை நடை பெற்று வருகிறது. பழநி ஆவணி முல வீதியில் உள்ள தனியார் மடத்தில் சித்ரா பவுர்ணமி அன்று கொத்து கொத்தாய் பழம், பூக்களில் தொரணங்கள் அமைந்து சித்திரகுப்தன் சிலையை வைத்து வழிபாடு நடந்தப்படுகிறது. இதில் சித்திரகுப்தன் வரலாறு பாடலாக பாடப்படுகிறது. மேலும் இதில் கலந்து கொண்டால் குழந்தை செய்வம் கிடைக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் மிகக் குறைந்த அளவில கலந்துகொண்டனர். பூஜை சிவசுப்ரமணியம் கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.