உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை; வெறிச்சோடி காணப்பட்ட கோவில்கள்

கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை; வெறிச்சோடி காணப்பட்ட கோவில்கள்

 தொண்டாமுத்தூர்: கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டதால், கோவில்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வீசி வருவதால், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனையொட்டி, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோவில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் மற்றும் சிறிய கோவில்களில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், அனைத்து கோவில்களிலும், அர்ச்சகர்கள் மூலம் சுவாமிக்கு, 4 கால பூஜையும் நடந்தது. இதனால், அனைத்து கோவில்களும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கற்பூரம் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !