சக்தி விநாயகர் கோவில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :1734 days ago
அன்னூர்: ஒட்டர்பாளையம், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. ஓட்டர்பாளையம் ஊராட்சி, ஜீவா நகரில், பழமையான சக்தி விநாயகர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா நேற்று காலை விநாயகர் கேள்வியுடன் துவங்கியது. மாலையில், திருவிளக்கு வழிபாடு, காப்பு கட்டுதல், முதற்கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை, மதியம் கோபுர கலசம் வைத்தல், இரவு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை காலை 7:45 மணிக்கு விநாயகர் மற்றும் கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.