உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் ஏமாற்றம்

பழநியில் பக்தர்கள் ஏமாற்றம்

பழநி : கொரோனா 2வது அலை பரவலால், பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அரசு வழிகாட்டு முறைப்படி நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மலைக்கோயில் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நேற்று தீர்த்தக் காவடி எடுத்து வந்த பலர் திரும்பிச் சென்றனர். பலர் பாத விநாயகர் கோவிலில் வணங்கி விட்டுச் சென்றனர்.திருஆவினன்குடி கோயிலின் வெளிப்புறத்தில் இருந்தவாறு பலர் தரிசனம் செய்தனர். நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால் உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் வந்து திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !