உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கஜேந்திர மோட்சம் புறப்பாடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கஜேந்திர மோட்சம் புறப்பாடு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று கஜேந்திர மோட்சம் புறப்பாடு நடந்தது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெளிக்கோடை, உள்கோடை திருவிழா (பூச்சாட்டு உற்சவம்) தலா ஐந்து நாட்கள் வீதம், 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 16 முதல், வெளிக்கோடை திருவிழா நடந்தது. அதை தொடர்ந்து, 22 முதல் உள்கோடை திருவிழா நேற்று முன்தினம் வரை நடந்தது. அப்போது, உற்சவர் நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, நாலு கால் மண்டபத்துக்கு சேர்வார். அங்கு புஷ்பம் சாத்துபடிக்கு பிறகு, வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு, நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். மேலும் கடந்த, 21 ல் ராமநவமியையொட்டி மதியம், 2:30 மணிமுதல் மாலை, 6:00 மணி வரை நம்பெருமாள், சேரகுலவள்ளி தாயார் நேர்த்தி சேவை நடந்தது. நேற்று சித்ரா பவுர்ணமி தினத்தில், கஜேந்திர மோட்சம் புறப்பாடு நடந்தது. அதில், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கஜேந்திர மோட்சம் புறப்பாடு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு ஊரடங்கு காரணமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள, கருட மண்டபத்தில் நடந்தது. இந்த வைபவத்தில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !