மாரியூரில் பக்தர்களின்றி நடந்த திருக்கல்யாணம்
ADDED :1730 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிறவல்லி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 9 மணியளவில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு, உற்ஸவர் அம்மன் கழுத்தில் மங்கல நாண் பூட்டப்பட்டது. மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் சிவபெருமானின் வலைவீசும் படலத்தில் நடக்கும் புராண நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.