உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தீஸ்வரன்கோயிலில் சண்முககவசம் ஆன்மீக நூல் வெளியிட்டு விழா

வைத்தீஸ்வரன்கோயிலில் சண்முககவசம் ஆன்மீக நூல் வெளியிட்டு விழா

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை மடத்தில் செவ்வாய்கிழமை சண்முககவசம் ஆன்மிக நூலை தருமபுரம் ஆதீனம்வெளியிட திமுக முதன்மை செயலாளர் கேஎன்.நேரு,உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்  வரும் 29ம் தேதி நாளை நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் வைத்தீஸ்வரன்கோயிலில் தங்கி பல்வேறு ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் மயிலாடுதுறை ஆன்மிகபேரவை பிரசுரித்துள்ள சரவணபவனார் காக்க, சண்முக கவசம் எனும் ஆன்மிக நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கரத்தால் ஆன்மீக நூலினை வெளியிட அதனை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு,திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும்,கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே. பன்னீர்செல்வம், ஆன்மிகபேரவை நிறுவனர் வழக்குரைஞர் இராம.சேயோன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது திமுக எம்எல்ஏ சாக்கோட்டை. அன்பழகன், திருச்சி முன்னாள் துணை மேயரும், மாநகர் செயலாளருமான அன்பழகன், திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட இளைஞரணி செயலால் அலெக்சாண்டர்,மாவட்ட பிரதிநிதி சாமிநாதன்,ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து கேஎன்.நேரு,எம் ஆர்கே.பன்னீர் செல்வம் ஆகியோர் வைத்திய நாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வ முத்துக்குமாரசுவாமிகளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !