உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தீஸ்வரன்கோவிலில் நாளை மகா கும்பாபிஷேம்

வைத்தீஸ்வரன்கோவிலில் நாளை மகா கும்பாபிஷேம்

மயிலாடுதுறை : சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.இக்கோவில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய் பகவான், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழா நடைபெறவுள்ளது.விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று 7 ம்நாளாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை காலை மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் வைத்தீஸ்வரன்கோயிலில் தங்கி பல்வேறு ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !