கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்
ADDED :1666 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மகா சாத்தையனார் கோவிலில் எருதுகட்டு விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன்பு கோபுர தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால், கோவில் விழா நடத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று கோபுர தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.