சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1721 days ago
அன்னூர்: ஒட்டர்பாளையம், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஒட்டர்பாளையத்தில், பழமையான சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த, 27ம் தேதி விநாயகர் வேள்வியுடன் துவங்கியது. 28ம் தேதி வேள்வி பூஜை, கோபுர கலசம் வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு சக்தி விநாயகருக்கும், விமானத்திற்கும், புனித நீர் ஊற்றி, சிரவை ஆதீனம் குமரகுருபர ஸ்வாமிகள் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இதையடுத்து, மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும், அன்னதானம் வழங்குதலும் நடந்தது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.