பச்சை வாழியம்மன் கோவிலில் திருமஞ்சனம் : தீமிதி விழா ரத்து
ADDED :1706 days ago
கடலுார்; கொரோனா தொற்று காரணமாக பிள்ளையார்மேடு பச்சை வாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா ரத்து செய்யப்பட்டு சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. கடலுார், குடிகாடு அடுத்த பிள்ளையார்மேட்டில் உள்ள பச்சை வாழியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி விழா விமர்சையாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டுக்கான தீ மிதி விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக அரசின் விதி முறையை பின்பற்றி, தீமிதி விழா ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக பக்தர்களின்றி சுவாமிக்கு நேற்று திருமஞ்சனம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.