ஆழ்வார்குறிச்சி முப்புடாதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்
ADDED :1621 days ago
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி தலை சாய்ந்த முப்புடாதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. ஆழ்வார்குறிச்சி சிவசைலம் மெயின்ரோட்டில் உள்ள தலைசாய்ந்த முப்புடாதி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம், விசேஷ பூஜைகள் நடந்தன. அம்மன், பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு தீபாராதனையை அர்ச்சகர் சுரேஷ்சிவம் நடத்தினார். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ளஅனுமதி அளிக்கப்படவில்லை. சிறப்பு பூ ஜைகளை பக்தர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டு களித்தனர்.