உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூராதீனத்தில் நடராஜருக்கு சித்திரை திருவோண வழிபாடு

பேரூராதீனத்தில் நடராஜருக்கு சித்திரை திருவோண வழிபாடு

கோவை: பேரூராதீனத்தில் நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு தினசரி 6 கால பூஜை நடப்பது போன்று, நடராஜருக்கு ஆண்டுக்கு 6 வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று சித்திரை திருவோண வழிபாடு பேரூராதீனத்தில் நடராஜருக்கு நடத்தப்பட்டது. இன்று காலை விநாயகர் பூஜை, நால்வர் துதி, திருவாசகம், பஞ்சபுராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓதி, வழிபாடுகள் நடந்தது. நடராஜருக்கு மலர்களால் அபிஷேகம் செய்து, அலங்கார தீபங்கள் காட்டி, பூஜைகள் நடத்தப்பட்டது. கொரோனா கட்டுப் பாடுகளால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !