உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா: ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் சேவை

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா: ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் சேவை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேர்த் திருவிழாவில், நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் சேவை சாதித்தார்.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.  நம்பெருமாள் வரும், 11 வரை கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவில் இன்று (மே.,6) நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும், 9ல்நடக்கிறது. பக்தர்கள் தேர் திருவிழாவை, srirangam temple (srirangam live)என்ற, யு-டியூப் சேனல் மூலம் காண வசதி செய்யப் பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !