திற்பரப்பு மகாதேவர் கோயில் சுவரில் வளர்ந்த செடிகள் அகற்றம்
ADDED :1718 days ago
திற்பரப்பு: ‘தினமலர்’ செய்தி எதிரொலியாக, திற்பரப்பு மகாதேவர் கோயில் ஊட்டுபுரை மற்றும் மதில் சுவருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காணப்பட்ட அரச மர செடிகள் கற்றப்பட்டது. பழமை வாய்ந்த திற்பரப்பு மகாதேவர் கோயிலின் தென்மேற்கு பகுதியில் பெரிய அளவிலான ஊட்டுபுரை அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலின் ஊட்டுபுரை சுவர் மற்றும் மதில் சுவரின் சில பகுதிகளில் அரசமர செடிகள் வளர்ந்து கா ணப்பட்டது. இது குறித்து ‘தினமலர்’ நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. செய்தி வெளியான அன்று திருக்கோயில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார், கோயிலை ஆய்வு செய்து, உடனடியாக செடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகளின் செயலை பக்தர்கள் பாராட்டினர்.