திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
ADDED :1961 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தீர்த்த உற்சவம் நேற்று நடந்தது. நேற்று காலை உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, சீவிலிநாயகர், அஸ்தர தேவர் எழுந்தருளினர். யாகசாலை பூர்த்தி செய்யப்பட்டு, வெள்ளி குடங்களில் இருந்த புனிதநீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது. உச்சகால பூஜைக்குபின், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தர தேவர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். பூஜைகள் முடிந்து, சிவாச்சார்யார்களால், அஸ்தர தேவர் சரவணப் பொய்கை தண்ணீருக்குள் கொண்டு சென்று, பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீர்த்த உற்சவம் நடந்தது.