உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாளிகைப்புறம் கோயில் வளாகத்தில் கணபதி சிலை பிரதிஷ்டை

மாளிகைப்புறம் கோயில் வளாகத்தில் கணபதி சிலை பிரதிஷ்டை

 சபரிமலை : சபரிமலையில் மாளிகைப்புறம் கோயில் வளாகத்தில் புதிய சன்னதி கட்டப்பட்டு கணபதி சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சபரிமலையில் நடந்த தேவபிரஸ்னத்தில் மாளிகைப்புறம் கோயில் வளாகத்தில் கணபதி சன்னதி இல்லாதது குறையாக காணப்பட்டது. இதை தொடர்ந்து கணபதி சன்னதி கட்டப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் முன்புறம் உள்ள நமஸ்கார மண்டபத்தில் பல ஆண்டுகளாக கணபதி சிலை இருந்தது. இங்கு கணபதிேஹாமம் நடத்தும் போது கணபதி அலங்காரத்தில் காட்சி தருவார், இந்த சிலையை மாளிகைப்புறம் வளாகத்தில் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.இதற்கான சடங்குகள் தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் நடந்தது. சுத்திகலச பூஜைகளுக்கு பின்னர் மதியம் 12:15 மணிக்கு பிரதிஷ்டை சடங்குகள் நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் தேவசம்போர்டு அதிகாரிகள் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர். மே19 இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !