சிறப்பு அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன் அருள்பாலிப்பு
ADDED :1603 days ago
விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. வீட்டிலிருந்த படியே விரதமிருக்க துவங்கி உள்ளனர். இதையடுத்து பக்தர்கள் இன்றி நேற்று நடைபெற்ற வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், பராசக்தி மாரியம்மனுடன் வெயிலுகந்தம்மன் அருள்பாலித்தனர். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் வளாகத்தில் மே 25ல் பொங்கல், 26ல் கயிறுகுத்து, அக்னி சட்டி எடுத்தல் நடக்கிறது.ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்தனர்.