பெருமாள் கோவில்களில் நரசிம்ம ஜெயந்தி விழா
ADDED :1593 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. பொள்ளாச்சி, ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், நரசிம்ம ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஆபரணங்கள், வெட்டிவேர் மாலை, பூமாலைகளால் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நரசிம்ம ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.