புத்த பவுர்ணமி தினம் தியாவகனஹள்ளியில் தியானம்
ADDED :1593 days ago
ஆனேக்கல் : புத்த பவுர்ணமியை ஒட்டி ஆனேக்கல் தாலுகா தியாவகனஹள்ளி கிராமத்தில் தியானம் நடந்தது. ஆனேக்கல் தியாவகனஹள்ளி கிராமத்தில் புத்த விஹார் அமைந்துள்ளது. புத்த பவுர்ணமியை ஒட்டி, நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, ஆஷா சுகாதார ஊழியர்களுக்கு, இலவச உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக தியானம் நடந்தது. பலரும் சமூக இடைவெளி கடைபிடித்து தியானத்தில் ஈடுபட்டனர்.