உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை மற்றும் கொரோனா அகல வேண்டி தன்வந்திரி யாகம்

உலக நன்மை மற்றும் கொரோனா அகல வேண்டி தன்வந்திரி யாகம்

திருநகர்: உலக நன்மை மற்றும் கொரோனா நோய் முற்றிலும் அகல வேண்டி திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் இன்றி தன்வந்திரி, மகாசுதர்சன யாகம் நடந்தது. இதையொட்டி மூலவர் வரதராஜ பெருமாள் முன்பு சக்கரத்தாழ்வார் எழுந்தருளினார். இரு வெள்ளி குடங்கள், சொம்புகளில் புனிதநீர் நிரப்பி யாகம் நடந்தது. மூலவர், சக்கரத்தாழ்வாருக்கு பால் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. தர்ம பரிபாலன சபையினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !