திருவையாறு மருத்துவ மனைக்கு ஆக்சிஜன் செரியூட்டும் கருவி வழங்கிய ஆதீனம்
ADDED :1694 days ago
தஞ்சாவூர், திருவையாறு அரசு மருத்துவமனைக்கு தருமை ஆதீனம் 27வது குரு மகா சந்நிதானம் 2 ஆக்சிஜன் செரியூட்டும் கருவி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக, சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை,தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவையாறு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நாகநாதன் மற்றும் மருந்து ஆளுநர் சாந்தியி லோகநாதன் வழங்கினார். அருகில் ஐயாரப்பர் இறைபணி மன்ற நிர்வாகிகள் சேகர் செந்தில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.