குமரி மாவட்ட கோயில்களில் தீயனைப்புத்துறையினர் ஆய்வு
ADDED :1665 days ago
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் தீயப்ணைப்புத்துறையுனர் ஆய்வு செய்தனர்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் கருவறை மேற்கூறை எரிந்து நாசமானது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய கோவில்களில் தீ தடுப்பு தணிக்கை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. தீயணைப்பு துறை டி.ஜி.பி மற்றும் இயக்குனர் அறிவுரைப்படி நேற்று நாகர்கோவில் நாகராஜா திருக்கோவிலில் தீயணைப்பு கருவிகளை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு ஆய்வு செய்தார். நாகர்கோவில் நிலைய அலுவலர் துறை, கோவில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் உடன் இருந்தனர்.