எமதண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1943 days ago
மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, மயிலம் சுந்தர விநாயகர் கோவிலிலும், பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், கொல்லியங்குணம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.