கேதார்நாத் மியூசியத்தில் வைக்க 12 அடி ஆதிசங்கரர் சிலை தயார்
ADDED :1583 days ago
மைசூரு: உத்தரகான்ட் மாநிலம், கேதார்நாத்தில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில், வைப்பதற்கு, 12 அடி உயர ஆதிசங்கரர் சிலை, மைசூரில் தயாராகியுள்ளது. உத்தரகான்ட் மாநிலம், கேதார்நாத்தில் ஆதிசங்கரர் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இங்கு, ஆதி சங்கரர் ஆராய்ச்சி பீடம் சார்பில், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. அந்த அருங்காட்சியகத்தில், ஆதிசங்கரர் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பது, பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். இந்நிலையில், மைசூரில், அருணா யோகிராஜ் என்ற சிற்ப கலைஞர் தலைமையில், நான்கு பேர் கொண்ட கலைஞர்கள், 2020, செப்டம்பரில் சிலையை வடிவமைக்க துவக்கினர். பேலுார் ஹளே பீடு கோவில்களில் உள்ளது போன்று, கிருஷ்ணர் என்ற ஒரே கருங்கல்லில் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல, கடந்த பத்து மாதங்களாக, 12 அடி உயர சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.