இவருக்கு மரங்கள் மேல் பாசம்
ADDED :4898 days ago
புதுச்சேரி ஆரோவில் ஆஸ்ரமத்தில் ஸ்ரீஅன்னை தங்கியிருந்தார். ஆஸ்ரமத்திலுள்ள பங்களாவில் ஒரு மாமரம் இருந்தது. அதற்கு மிகவும் வயதாகி விட்டது. அதை வெட்டிவிடலாம் என ஸ்ரீஅன்னையிடம் ஆஸ்ரம பாதுகாவலர் யோசனை சொன்னார். வேண்டாம் என மறுத்து விட்டார் ஸ்ரீஅன்னை. மற்றொரு தடவை, ஒரு பக்தரை அழைத்து, இங்குள்ள ஒரு ஆலமரம் மிகவும் சிரமப்படுகிறது. அதன் சிரமத்தைப் போக்குங்கள், என்று உத்தரவிட்டார். அவர் பல இடங்களில்சுற்றிமரங்களைப் பார்வையிட்டார். ஓரிடத்தில் மரத்தின் வேர் பகுதியில், யாரோகத்தி ஒன்று குத்தி வைத்திருப்பதைக் கண்டார். கத்தியை அகற்றினார். இப்படிமரங் களுக்கும் அருள்செய்பவராக விளங்கினார் அன்னை.