உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு

இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு

எச்சரிக்கிறார் விவேகானந்தர்

* இப்போது இருக்கும் நிலைக்கு நீ மட்டுமே பொறுப்பு. எனவே விரைந்து நற்செயலில் ஈடுபடு.  
* தோல்வியை கண்டு மனம் தளர வேண்டாம். கீழே விழுந்தாலும் திரும்ப எழுந்து லட்சியத்தைப் பிடித்துக் கொள்.  
* சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாக கையாளாமல் போனதும் காரணம்.
* பொறாமையை மட்டும் போக்கினால்  மகத்தான செயல்களை செய்ய முடியும்.  
* சுயநலம் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே உலகிற்கு தேவை.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
* உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் அணுகுவது கூடாது.
* உன்னை நீயே பலவீனன் என நினைப்பது உனக்குச் செய்யும் பெரிய பாவம்.
* மனதை உயர்ந்த லட்சியங்களால் நிரப்பு. அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.
* எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். வலிமை உடையவன் என நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.
* சோம்பேறித்தனம் எந்த வழியில் வந்தாலும் அதை விரட்டியடி.
* தோல்வியை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.
* வாழ்வில் பட்ட துன்பத்தை விட அதில் பெற்ற அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடு.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
* கீழ்ப்படியக் கற்றுக் கொண்டால் கட்டளையிடும் பதவி தானாக கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !