உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதை அடக்கியாளக் கற்றுக்கொள்

மனதை அடக்கியாளக் கற்றுக்கொள்

நெறிப்படுத்துகிறார் ஷீரடிபாபா  

* மனதை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதே புத்திசாலித்தனம்.
* பேராசை, அதிகப்பற்று ஒருவனை புலன் இன்பங்களில் தள்ளி விடும்.
* புலன் இன்பத்தில் இருந்து விடுபட ஆன்மிக நாட்டம் ஒன்றே வழி.
* கோயில் தரிசனத்தால் நம்மைச் சுற்றி நல்லெண்ண அலைகள் பரவும்.
* தியானப் பயிற்சியால் மனதில் நல்லெண்ணம் மேலோங்கும்.
* குருநாதரின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண முடியாது.
* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருது.       
* பணவசதி இருந்தால் ஏழைகளுக்கு உதவுதில் கவனம் செலுத்து.  
* உருவ வழிபாட்டால் அலை பாயும் மனதை ஒருநிலைப்படுத்தலாம்.       
* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே விவேகம்.      
* பிறருக்கு உதவி செய்து வாழ்வது புண்ணியம். துன்பம் இழைப்பது பாவம்.
* யாரிடமும் சண்டையிட வேண்டாம். சமாதானத்துடன் இரு.
* பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடு.  
* பணமோ, உதவியோ கேட்டு நிற்பவருக்கு கொடுக்க மனமில்லாவிட்டால் அலட்சியப்படுத்தாதே.
* உதவி செய்ய முடியாவிட்டால் விட்டால் அன்பான வார்த்தைகளையாவது பேசு.
* கடவுள் நம்பிக்கை இருப்பவன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
ஷீரடி பாபா     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !