உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிறைவுடன் வாழட்டும்

நிறைவுடன் வாழட்டும்


ஸஃஅத் இப்னு அபிவக்காஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது அவரை நலம் விசாரிக்க வந்தார் நாயகம்.
 ‘‘ நான் நோயில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த மண்ணில் இருப்பேனோ தெரியவில்லை. என் பெயரில் நிறைய சொத்துக்கள்  உள்ளன. எனக்கு ஒரே மகள் மட்டுமே வாரிசாக இருக்கிறாள். அதனால் என் சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தைக் தர்மத்திற்காக எழுதி வைக்கலாமா?” எனக் கேட்டார்.
‘வேண்டாம்’ என்றார்.
‘பாதியாவது தர்மத்திற்கு கொடுக்கலாமா?’’என்றார் அபிவக்காஸ்.
அதற்கும் ‘வேண்டாம்’ என்றார்.
 ‘மூன்றில் ஒரு பாகத்தையாவது?’’என்று கேட்டார் அபிவக்காஸ்.
‘‘சரி, மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய். அதுவும் கூட அதிகம் தான். ஏனெனில் உன் வாரிசை வறுமையின் காரணமாக,  பிறரிடம் கை ஏந்தும்படி விட்டுச் செல்வதை விட அவர்களை நிறைவுடன் வாழச்செய்வதே நற்செயல்’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !