மலர் போல் மனம் வேண்டும்
ADDED :1686 days ago
மென்மையான மனம் கொண்டவராக நாம் இருக்க வேண்டும். குழந்தைகள் மனைவி, தாய், தந்தையிடம் மட்டுமல்ல...சக பணியாளர், அண்டை வீட்டார், அவசர செலவுக்கு கடன் வாங்கியவர்கள் என அனைவரிடமும் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும்.
“மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தவன் ஆகிறான். இறைவன் மென்மையான இயல்புடையவன். அவன் மென்மையை விரும்புகிறான். வன்மைக்கும் மற்ற குணங்களுக்கும் தராத நற்கூலியை மென்மையை கைக்கொள்ளும் போது அவன் அருள்கிறான்’’