மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1563 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1563 days ago
மனிதர்கள் தண்டனைக்கு ஆளாகும் போது ஆண்டவர் மீது கோபம் கொள்கிறார்கள். காரணமின்றி அவர் யாரையும் தண்டிப்பதில்லை. பின்னால் வருவதை அறிந்தே அவர் நம்மை செயல்படுத்துகிறார். வாலிபர் ஒருவர் கண்மூடித்தனமாக சாலையில் வண்டி ஓட்டியதால் விபத்துக்குள்ளாகி கால்களை இழந்தார். அதற்கு பதிலாக மரத்தால் ஆன கால்களைப் பொருத்திக் கொண்டார். அதன் பின் ஒருமுறை அவர் காட்டுவாசிகள் சிலரால் கடத்தப்பட்டார். அவர்களின் தலைவன்,‘‘இன்று நல்ல வேட்டை. இவனது மாமிசத்தை உண்டு மகிழ்வோம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என உத்தரவிட்டான். அதைக் கேட்டதும் காட்டுவாசிகள் அவனை நெருங்கினர்.அவனை வெட்ட முயன்ற போது காலுக்கு பதிலாக கட்டை இருப்பது கண்டு பயந்தனர். அதிர்ச்சியான தகவலை தலைவனிடம் தெரிவித்தனர். வாலிபன் அருகில் வந்து பார்க்க அவன் பயந்தான். வாலிபனை தெய்வப்பிறவியாக கருதினான். ‘‘ இவரது கால்கள் நம்மைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர் ஆண்டவர் போல இருக்கிறார். ஆகவே வெட்ட வேண்டாம்” என்றதோடு அவனையே தன் குருவாகவும் ஏற்றுக் கொண்டான். அதன் பின் அந்த வாலிபன் அவர்களிடமிருந்து தப்பித்தான். பலவீனம் என நினைப்பது கூட நமக்கு ஆண்டவரின் கிருபையால் பலமாகும்.
1563 days ago
1563 days ago