இனிக்கும் முதுமை
ADDED :1686 days ago
படுத்த படுக்கையாக கிடந்த முதியவரின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. அவரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர், ‘‘உங்களுக்கு எத்தனை வயதாகிறது ஐயா?”
சிரித்த முகத்துடன், ‘‘மனித வாழ்வின் எண்பது என்னும் இனிய பகுதியில் இருக்கிறேன்.’’
‘‘எண்பது உங்களுக்கு இனிமையாக இருக்கிறதா! நோயில் தவிக்கும் போது வாழ்வு இனிக்குமா?’’
வாய்விட்டுச் சிரித்த முதியவர்,‘‘வயதான காலத்தில் என் கால்கள் தள்ளாடுவது உண்மையே. கண்களும் மங்கிவிட்டன. மொத்த உடலும் பலம் இழந்து விட்டது என்றாலும் இனிமையான காலம் நெருங்குவதை உணர்கிறேன். ஆண்டவரை காணும் நாளை எண்ணி மகிழ்கிறேன். தேவ துாதர்களையும் சந்திக்க தயாராகி விட்டேன். இந்த நல்ல நினைவே மனதை இனிமையாக்குகிறது,’’ என்றார்.
உடலுக்கு எத்தனை வயதானாலும் மனம் பக்குவம் பெற்றால் போதும். முதுமையும் இனிக்கும்.