ஒழுக்கம் ஒன்றே வழி
ADDED :1686 days ago
பாறையில் இருந்து பள்ளத்தில் விழுந்தால் இறப்பு வரும் வரை மட்டுமே வேதனை. ஆனால் பாவம் எனும் பள்ளத்தில் விழுந்தால் மொத்த வாழ்வும் வேதனையாகி விடும். தவறு செய்தவர்கள் சிலர் மனசாட்சியின் உறுத்துதலால் காலமெல்லாம் வேதனை அனுபவிப்பதை கண்கூடாகவே காண்கிறோம். இதில் இருந்து தப்பிப்பதற்கு ஒழுக்கம் ஒன்றே வழி. ஒழுக்கமான வாழ்வில் இருந்து நழுவாதபடி நம்மை தாங்கிப்படிக்கும் கைகள் ஆண்டவருடையது. மனம் சறுக்கும் போதெல்லாம் அவரது கருணை நம்மைத் தாங்குகிறது. அன்றாட ஜெபத்தில் ஒழுக்கமுடன் வாழ வேண்டும் எனப் பிரார்த்தியுங்கள்.