சிரவை யாதீனத்தில் வேல் வழிபாடு
ADDED :1608 days ago
கோவை: சிரவையாதீனம் கவுமார மடாலயத்தில், வேல் வழிபாடு நடந்தது. இணைய வழியில் ஏராளமானோர் வழிபாடு செய்தனர். ஊரடங்கில், செவ்வாய்தோறும் மாலை 5:00 மணிக்கு சிரவையாதீனத்தில், வேல் வழிபாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம், சிரவையாதீனத்திலுள்ள கந்தசாமி கடவுள் சன்னதியில், வழக்கமான பூஜைகளை தொடர்ந்து, சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் முருகப்பெருமானுக்கும், வெற்றிவேலுக்கும் சிறப்பு பூஜைகளை நடத்தினார். சிரவையாதீனகர்த்தர்கள் வெற்றிவேல் குறித்து, போற்றிஓம் பாமாலைகளை பாராயணம் செய்தனர். தொட ர்ந்து பால், பழம், மலர் ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டன. அவை இணையத்தில் ஒளி, ஒலி காட்சியாக பதிவு செய்யப்பட்டது. சிரவை யாதீனத்தில் வேல் வழிபாடு