உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரை கடற்கரைக்கு கடற்கரைக்கு புனித நீராட திரளும் மக்கள்

சேதுக்கரை கடற்கரைக்கு கடற்கரைக்கு புனித நீராட திரளும் மக்கள்

சேதுக்கரை: சேதுக்கரை கடற்கரைக்கு புனித நீராடுவதற்காக சமூக இடைவெளி இன்றியும் நெரிசலோடும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, சில கட்டுப்பாடுகளுடன் உள்ள நிலையில், சேதுக்கரை கடற்கரைக்கு கடந்த 10 தினங்களாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமானோர் புனித நீராடுவதற்காக வருகை தருகின்றனர். பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சரக்கு வாகனங்களில் திறந்தவெளியில் பயணம் செய்வது தொடர்கிறது. இதனால் கொரோனா தொற்று மீண்டும் பரவுவதற்கு அபாயம் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் வருவோரிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !