சந்திர பகவான் சிலை கண்டெடுப்பு
ADDED :1603 days ago
தங்கவயல் : கண்ணபிரான் சன்னிதி யை புதுப்பிக்கும் போது பூமிக்குள் புதைந்திருந்த சந்திர பகவான் சிலை கண்டெடுக்கப்பட்டது. தங்கவயல் உரிகம் எஸ்.டி.பிளாக் வட்டத்தில், 1948 ஏப்ரல் 17 ல் கண்ணபிரான் பஜனை சன்னதி அமைக்கப்பட்டது.இதை புதுப்பிக்கும் பணியை அப்பகுதி பக்தர்கள் துவக்கி உள்ளனர். ஜெ.சி.பி., மூலம் வைத்து பள்ளம் தோண்டினர். அப்போது பழமையான கற்சிலை ஒன்று கண்டெடுத்தனர். சந்திர பகவான் சிலையென ஆன்மிக பெரியோர் தெரிவித்தனர். இதனை நீரால் கழுவி சுத்தப்படுத்தி சம்பிரதாயப்படி அபிஷேகம் செய்தனர்.கோவிலில் பிரதிஷ்டை பூஜை செய்யப்படும் என பக்தர்கள் தெரிவித்தனர்.