உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டுக்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்

வழிபாட்டுக்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், நாளை முதல் பக்தர்கள் வழிபட தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், மத வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், நாளை முதல், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் வழிபாடு செய்ய அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து, தஞ்சை பெரிய கோவிலில், ஒரு வழியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், இன்னொரு வழியில் வெளியே வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவிலுக்குள் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்பதற்காக, தரையை சுத்தம் செய்து வட்டமிடுவது போன்ற பணிகளில் பணியமதாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பக்தர்களுக்கும் கிருமி நாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் எந்த பகுதியிலும் சுற்றிப்பார்க்கவோ, அமரவோ அனுமதி கிடையாது. சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் அனுமதி கிடையாது என, தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !