வேத கோஷம் முழங்க காரமடை ரங்கநாதருக்கு திருமஞ்சனம்
ADDED :1919 days ago
காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆனி கிருஷ்ண பட்ச ஏகாதசியை முன்னிட்டு வேத கோஷம் முழங்க ரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் ஆனி கிருஷ்ண பட்ச ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் வேத கோஷம் முழங்க ரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.