உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் உற்ஸவம்

பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் உற்ஸவம்

கீழக்கரை: கீழக்கரை சாலைத்தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று மூலவர் பத்ரகாளி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !