உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு: நேரடி ஒளிபரப்பு

பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு: நேரடி ஒளிபரப்பு

சென்னை : சென்னை நகரின் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ வழிபாடு, அறநிலையத்துறை சார்பில் நேரலையாக இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அதன்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு, http://www.youtube.com/c/MYLAPOREKAPALE ESWARARTEMPLE என்ற இணையதள முகவரி வாயிலாக, இன்று மாலை 4:30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு, https://www.youtube.com/c/ Thiagarajaswamy Vadivudai yammanTempleOfficial என்ற இணையதள முகவரி வாயிலாக, இன்று மாலை, 4.00 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பாகிறது.திருவேற்காடு, வேதபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு, https://youtu.be/ARzok68XRuA என்ற இணையதள முகவரி வாயிலாக, இன்று மாலை, 4.30 மணி முதல் நேரலையாக ஒளிரப்பு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !