சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைப்பு!
ADDED :4857 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைகளுக்காக, கடந்த 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையைத் திறந்தார். மறுநாள் காலை முதல் வழக்கம்போல் பூஜைகள் துவங்கின.தினமும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, நேற்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி, ஆடி மாத பூஜைகளுக்காக, ஜூலை 15 ல் மாலை 5.30 க்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும்.