உண்மையை பேசுங்கள்
சொல்கிறார் வள்ளலார்
* உண்மையை பேசுங்கள். அது உங்கள் மேல் உள்ள மரியாதையை கூட்டும்.
* ஏழைகளின் மனம் வலிக்கும் படி எதுவும் செய்யாதே.
* கடவுளை சரணடைந்தால் பொய், பொறாமை நீங்கும்.
* குருவை வணங்க தயங்காதே.
* எந்த உயிரையும் துன்புறுத்தாதே.
* எப்போதும் அன்புடனும், இரக்கத்துடன் வாழு.
* கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் வேண்டாமே.
* விரதம் இருப்பதை விட யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே நல்லது.
* பிறருக்கு கொடுப்பதற்காகவே கடவுள் செல்வத்தை கொடுத்தார்.
* உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களுடன் பழகாதே.
* எல்லா உயிர்களையும் தன்னை போல் நினைப்பவர்களின் மனதில் கடவுள் இருக்கிறார்.
* எல்லா செயலிலும் பொது நலன் இருக்க வேண்டும். வழிபாட்டிலும் கூட சுயநலம் கூடாது
* உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட பசித்தவருக்கு உணவு கொடு.
* பிறர் பசியை போக்குவதோடு அவரின் துன்பத்திலும் பங்கெடு.