வரதராஜ பெருமாள் கோவிலில் கொடிமரம் ஸ்தாபன பூஜை
ADDED :1656 days ago
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கொடி மரம் ஸ்தாபன பூஜை நடந்தது. கடைவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 35 உயரத்தில் கொடி மரம் தயார் செய்யப்பட்டது. இந்த கொடி மரத்தை கோவில் முன் வைக்க ஸ்தாபன பூஜை நேற்று நடந்தது.அதனையொட்டி, இஞ்சிமேடு பிரசன்ன பட்டாச்சாரியார் தலைமையில் ஹனுஜன் பட்டாச்சாரியார் சிறப்பு பூஜை செய்து கிரேன் உதவியுடன் கொடி மரத்தை ஸ்தாபனம் செய்தனர்.கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பூர்ணராவ், பொருளாளர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் சீனுவாசன், கவுரவ தலைவர் சுப்புராயலு, துணைத் தலைவர் சந்தானம், துணைச் செயலாளர் சக்தி, முன்னாள் சேர்மன் குமாரசாமி, ஸ்தபதிகள் நாகப்பன், பிரபு, நிர்வாகக் குழுவினர் பொதுமக்கள் பங்கேற்றனர்.